Type Here to Get Search Results !

I Life - Translate

The Lion and The Mouse (Moral Stories)


This Page is About The Apple Tree and the Farmer Moral Stories.

ஒரு முறை ஒரு காட்டில் ராஜாவான சிங்கம்  தூங்கிக்கொண்டிருந்த போது, ஒரு சிறிய எலி சிங்கத்தின் மீது மேலும் கீழுமாக ஓடத் தொடங்கியது. அதனால் அந்த சிங்கம் தூக்கத்திலிருந்து  விழித்துக்கொண்டது. பின்னர் அந்த சிங்கம் எலியை பிடித்து விழுங்குவதற்காக தனது பெரிய வாயை திறந்தது.

அப்போது அந்த சிறிய எலி மன்னிக்கவும் ராஜா!இப்பொது என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு போதும் மறுபடியும் இப்படி செய்யமாட்டேன் மற்றும் உங்களது தயவை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நீங்கள் இப்போது என்னை மன்னித்து விட்டால் பிறகு எப்போதாவது என்னால் உங்களுக்கு உதவ முடியும் என்று மன்னிப்பு கேட்டு அழுதது.

சங்கமும் எலி சொன்னதை கேட்டுவிட்டு அந்த சிறிய எலியை மன்னித்துவிட்டது. எலியும் சிங்கத்தை புகழ்ந்து தனது நன்றியை தெரிவித்தது.

சிறிது நேரம் கழித்து சில வேட்டைக்காரர்கள் அந்த சிங்கத்தை பிடிப்பதற்காக அங்கு வந்தனர். பின் அந்த வேட்டைக்காரர்கள் சிங்கத்தை பிடித்து ஒரு மரத்தில் கட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து அவர்களது வாகனத்தை எடுப்பதற்காக சென்றனர்.

இதை பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறிய எலி மரத்தின் மேல் ஏறி சிங்கம் இருந்த வலையை தனது பற்களால் கடித்து ராஜா சிங்கத்தை காப்பாற்றியது.

எலி சொன்னபடி அந்த சிங்கத்திற்கு உதவியதில்  மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. சிங்கமும் எலியிடம் நன்றியை தெரிவித்தது. பின் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக சந்தோசமாக வாழ்ந்தனர்.


கதையின் நீதி :
நாம் செய்யும் உதவி சிறிதாக இருந்தாலும் அதன் பலன் பெரிதாக கிடைக்கும்.