Type Here to Get Search Results !

I Life - Translate

The Apple Tree and The Farmer (Moral Stories)


This Page is About The Apple Tree and the Farmer Moral Stories.


ஒரு காலத்தில், ஒரு கிராமத்தில், ஒரு காட்டுக்கு அருகில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பெரிய தோட்டத்தை வைத்திருந்தார். அதில் பழைய ஆப்பிள் மரம் மற்றும் மற்ற தாவரங்கள், மரங்கள் மற்றும் அழகான பூக்கள் என்பன இருந்தன.

விவசாயி சிறு பையனாக இருக்கும் போது, ​​ஆப்பிள் மரத்துடன் விளையாடுவதில் அதிக நேரம் செலவிட்டார். அந்த நாட்களில், ஆப்பிள் மரம் அவருக்கு மிகச் சிறந்த நிறைய ஆப்பிள்களைக் கொடுத்தது. ஆனால் காலம் செல்ல செல்ல ஆப்பிள் மரம் பழையதாகி பழங்களை தருவதை நிறுத்திவிட்டது.

இப்போது விவசாயி மரத்திலிருந்து எந்த ஆப்பிளும் கிடைக்காததால், அவர் அந்த மரம் பயனற்றது என்று முடிவு செய்தார். எனவே அந்த மரத்தை வெட்டி அதனை பயன்படுத்தி சில தளபாடங்களை தயாரிக்க முடிவு செய்தார். மரம் பழையதாகவும், பெரியதாகவும் இருப்பதால் அதனால் சிறந்த தளபாடங்களை உருவாக்க உதவும் என்று அவர் நினைத்தார். ஒரு சிறுவனாக அவர் தனது குழந்தை பருவத்தை முழுவதுமாக அந்த மரத்தில் ஏறி அதன் ஆப்பிள்களை சாப்பிட்டதை அவர் மறந்துவிட்டார்.

இப்போது இந்த ஆப்பிள் மரம் பல சிறிய விலங்குகளின் வீடாக இருந்தது. இதில் அணில், சிட்டுக்குருவிகள் மற்றும் பல வகையான பறவைகள் மற்றும் பூச்சிகள் இருந்தன. விவசாயி தனது கோடரியை எடுத்து மரத்தை வெட்டத் தொடங்கியபோது ​​சிறிய விலங்குகள் அனைத்தும் கீழே விரைந்து வந்தன.

அவைகள் அனைத்தும் விவசாயியிடம் மன்றாடத் தொடங்கியது. அவைகள் விவசாயியை சுற்றி கூடி, தயவு செய்து மரத்தை வெட்ட வேண்டாம், நீங்கள் சிறியவனாக இருந்தபோது ​​இந்த மரத்தின் அடியில் நாங்கள் உங்களுடன் விளையாடுவோம். இது எங்களுடைய வீடு மற்றும் எங்களுக்கு வசிப்பதற்கு வேறு இடமில்லை என்று அந்த விலங்குகள் மன்றாடின.

ஆனால் விவசாயி பிடிவாதமாக இருந்தார். அவர் கோடரியை உயர்த்தி வெட்டிய போது மீண்டும் அவைகள் அழுது மன்றாடின.

"தயவு செய்து எங்கள் வீட்டையும் குழந்தைகளையும் இந்த மரத்தை வெட்டி  அழிக்க வேண்டாம்" என்று அணில் அழுதது.

"தயவு செய்து எங்கள் கூட்டை வெட்டி அழிக்க வேண்டாம்" என்று சிறிய பறவைகள் அழுதன.

"தயவு செய்து ஆப்பிள் மரத்தை வெட்ட வேண்டாம்" என்று வெட்டுக்கிளி அழுதது.

இருப்பினும் விவசாயி தனது குழந்தைப் பருவத்தையும் விலங்குகாளான தனது நண்பர்களையும் மறந்து விட்டார். பின் அவர் மரத்தை கடினமாக வெட்டத் தொடங்கினார். சிறிய விலங்குகள் அனைத்தும் அவநம்பிக்கை அடைந்தன. ஆனால் மறுபடியும் அவைகள் அவரிடம் அழுது மன்றாடின.

சிறிய பறவைகள், நீங்கள் வயல்களில் உழைக்கும் போது நாங்கள் உங்களுக்காகப் பாடுவோம். உங்களது  சிறு பையனை நாங்கள் அழாமல் பார்த்துக்கொள்வோம். மற்றும் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்போம். எங்கள் பாடல்களை நீங்கள் விரும்புவீர்கள், நீங்கள்  சோர்வாக இருக்கும் போது அதை ரசிப்பீர்கள்.

இருப்பினும் அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் மற்றும் அவர்களின் உதவிக்கான அழுகையும் செவிடன் காதில் விழுந்தது போல ஆயிற்று. விவசாயி தொடர்ந்தும் மரத்தை வெட்ட தொடங்கினார்.

அப்பொது அவர் மரத்தில் பளபளப்பான ஒன்றை கவனித்தார். அதை பரிசோதித்தபோது, ​​அது ஒரு தேனீ, தேன் நிறைந்தவை என்பதை உணர்ந்தார். கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தார். தேனின் சுவை அவனுக்குள் இருந்த சிறுவனை எழுப்பியது. திடீரென்று, அவரது குழந்தைப் பருவத்தின் நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. தேன் மிகவும் நன்றாக இருந்ததால் அவர் இன்னும் அதை சுவைக்க விரும்பினார். அது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவர் இது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூச்சலிட்டார்.

விவசாயியின் செயற்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்து, சிறிய விலங்குகள் ஒற்றுமையாகப் பேசின. தேனீ சொன்னது "நான் எப்போதும் உங்களுக்கு இனிமையான தேனை வழங்குவேன்" என்று. அணில் சொன்னது "நீங்கள் விரும்பும் எந்த கொட்டைகளையும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று. பறவைகள் சொன்னது "நீங்கள் விரும்பும் பல பாடல்களை நாங்கள் பாடுவோம்" என்று அழுதனர்.

கடைசியில், விவசாயி தனது முட்டாள் தனத்தை உணர்ந்து கோடரியை கீழே போட்டார். அந்த மரம் பல அழகான விலங்குகளின் வீடு என்பதை அவர் புரிந்து கொண்டார். அது அவருக்கு பல விஷயங்களை ஞாபகப்படுத்தியது. மற்றும் தனது சிறு பையனுக்கும் தனக்கு இருந்தது போல குழந்தைப் பருவம் வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆப்பிள் மரம் பயனற்றது அல்ல என்பதை விவசாயி உணர்ந்தார். அவனுள் இருந்த சிறு பையன் ஆப்பிள் மரத்தை காப்பாற்றினான்.

அவர் கோடரியை எறிந்துவிட்டு சிறிய உயிரினங்களை நோக்கி "நான் இந்த மரத்தை ஒருபோதும் வெட்ட மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன், என் தவறை நான் உணர்ந்தேன். நீங்கள் அனைவரும் இப்போது நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ முடியும்" என்று கூறினார்.

சிறிய உயிரினங்கள் தேனீக்கு மிகுந்த நன்றி தெரிவித்தன. விவசாயி தேனீயைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவர்கள் இப்போது வீடற்றவர்களாக இருந்திருப்பார்கள். அதன் பிறகு  அவர்கள் பழைய ஆப்பிள் மரத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

கதையின் நீதி :
இயற்கையில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஏதேனும் ஒரு பயனளிக்கும் ஆகவே நாம் எந்த உயிரினத்தையும் அழிக்கக்கூடாது.