ஒரு காலத்தில் மிகவும் தந்திரமான மற்றும் குறும்புத்தனமான ஒரு நரி வாழ்ந்து வந்தது. நரி மற்ற விலங்குகளுடன் நற்பை ஏற்படுத்துவதற்காக இனிமையாகப் பேசும். மற்ற விலங்குகள் மீது தனது தந்திரங்களை உபயோகிப்பதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெறும்.
ஒரு நாள் நரி ஒரு நாரையை சந்தித்தது. அவர் அந்த நாரையுடன் ஒரு நல்ல நண்பரைப் போல நடித்தார். பிறகு ஒரு நாள் அவர் அந்த நாரையை தன்னுடைய விருந்து ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். நாரையும் மகிழ்ச்சியுடன் அழைப்பை ஏற்றுக்கொண்டது.
அப்புறம் அந்த நாரை நரியின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றது. ஆனால் அந்த நரி கூறியபடி ஒரு பெரிய விருந்து ஒன்றும் செய்யாமல் ஒரு சிறிய சூப் மற்றும் கொடுக்க முடிவு செய்தது. பின்னர் நரி சமையலறையிலிருந்து சூப்பை வெளியே கொண்டு வந்தது நாரையால் அதை சுவைக்க முடியாத ஒரு ஆழமற்ற கிண்ணத்தில் கொடுத்தது.
அந்த நாரை அதன் நீண்ட சொண்டால் அந்த சூப்பை குடிக்க முடியவில்லை, ஆனால் நரி எளிதில் கிண்ணத்தில் இருந்து சூப்பை நக்கியது. நாரை அதன் நீண்ட சொண்டின் நுனியால் சூப்பைத் தொட்டபோது, நரி அதனிடம், சூப் எப்படி இருக்கிறது? உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று புத்திசாலி தனமாக கேட்டது.
அதற்கு பசியுடன் அந்த நாரை, மிகவும் நன்றாக உள்ளது ஆனால் என் வயிறு இன்று சரியில்லை, என்னால் இந்த சூப்பை குடிக்க முடியாது என்றது. அதற்கு நரி உங்களை தொந்தரவு செய்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியது.
"ஓ நண்பா" தயவு செய்து அப்படி சொல்ல வேண்டாம். எனக்கு தான் கொஞ்சம் உடல் நலப் பிரச்சினை உள்ளது, உங்கள் சூப்பை என்னால் இன்று குடிக்க முடியவில்லை என்று நாரை பதிலளித்தது.
நாரை நரிக்கு நன்றி தெரிவித்த பின் அந்த இடத்தை விட்டு போகும் போது நரியை இரவு சாப்பாட்டிற்கு தன் வீட்டிற்கு அழைத்தது.
அழைப்பை ஏற்றுக்கொண்ட நரி இரவு சாப்பாட்டிற்கு நாரையின் வீட்டுக்கு சென்றது. இனிப்புகளை பரிமாறிக்கொண்ட பிறகு நாரை இருவருக்கும் சூப் பரிமாறியது. அப்போது நாரை ஒரு நீண்ட குறுகிய ஜாடியில் சூப்பை நரியிடம் கொடுத்தது. நாரை அதன் நீண்ட சொண்டால் அந்த சூப்பை மிக எளிதாக குடிக்க முடிந்தது. ஆனால் நரிக்கு அந்த சூப்பை குடிக்க முடியவில்லை.
அப்போது நாரை நரியிடம், சூப் எப்படி இருக்கிறது? உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று நரி அதனிடம் கேட்டது போல நாரை நரியிடம் கேட்டது. அப்போது நரிக்கு, தான் நாரைக்கு கொடுத்த விருந்து நினைவுக்கு வந்தது. பின்னர் நரிக்கு மிகவும் வெட்கமாக இருந்தது மற்றும் நரி தடுமாறியது. நரி இப்பொது தான் இங்கிருந்து வெளியேறுவது நல்லது என்று யோசித்தது. பிறகு நாரையிடம் எனக்கு இன்று வயிறு சரியில்லை நான் போகவேண்டும் என்று சொன்னது.
அவமானப்படுத்தப்பட்ட நரி அந்த இடத்தை விட்டும் விரண்டோடியது.
கதையின் நீதி :
நாம் ஒருவருக்கு செய்யும் கேட்ட செயல் மறுபடியும் நம்மையே அது வந்து சேரும்.
நாம் ஒருவருக்கு செய்யும் கேட்ட செயல் மறுபடியும் நம்மையே அது வந்து சேரும்.
Social Plugin