Type Here to Get Search Results !

I Life - Translate

Medicinal Properties of Ber Fruit (Herbs and Their Medicinal Properties)

Ber Fruit - இலந்தைப் பழம். 

This Page is About Medicinal Properties of Ber Fruit - இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்  & Herbs and Their Medicinal Properties. 

இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் 

* இலந்தை பழத்தில்  74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. இதை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது .

* இலந்தை பழம் உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் இலந்தை பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* இந்தப் பழத்தில் வைட்டமின் A , B , C , D சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. 

* மாணவர்களின் ஞாபக திறனை அதிகரிக்க இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

* மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்பு குறைபாடு உள்ள குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.

* இலந்தை பழம் பித்தம், வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

* இலந்தை பழம் பசியின்மையை போக்கி பசியை தூண்ட பயன்படுகிறது.

* பெண்களுக்கு மாதவிலக்கின் பொது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்த இலந்தை பழம் பயன்படுகிறது. இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4, ஆகியவற்றை அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வந்தால் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

* இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இலந்தை பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இரவில் தூங்கும் போது இலந்தை பழத்தை சாப்பிட்டால் உடல் வலியை நீங்க செய்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.

* இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.

* இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

* உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல், வாந்தி போன்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பித்தத்தினால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள இலந்தை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நன்மை தரும்.

* இரத்தக் காயம் பட்ட இடத்தில் இலந்தை பழத்தின் இலளைகளை நன்றாக அரைத்து காயத்தின் மீது கட்டினால் விரைவில் ஆறிவிடும். உடல் சூட்டினால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கவும் இலந்தை பழம் பெரிதும் பயன்படுகிறது.

* சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

* பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

* பழுத்த காட்டு இலந்தைப்பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி, அத்துடன் 8 பங்கு நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் மீண்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டுவந்தால் உடல் எரிச்சல் தணிந்து, ரத்த அழுத்தம் சீராகும். மற்றும் உடல் சுறுசுறுப்பு உண்டாகும்.

* இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வந்தால், அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

* கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் இருமல் தணியும்.

* இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர் பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்கவும், மலமிளக்கு பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. 

* இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதய நோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.

* வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும் இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலசினால் இளநரை மாறும். 

* துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மற்றும் மாலையில் குடித்தால் வயிற்றுக் கடுப்பு மற்றும் இரத்தப்பேதி தீரும்.

👍👍👍 Thanks For Reading 👍👍👍