Type Here to Get Search Results !

I Life - Translate

To Protect the Skin in the Summer (Diseases and Herbal Medicine for Them)


This Page is About To Protect the Skin in the Summer (கோடையில் சருமம் கருப்பாகாமல் இருக்க) & Diseases and Herbal Medicine for Them

கோடைக்காலம் வந்தாலே, கொளுத்தும் வெயிலினால், கடுமையான வெயில் தாக்கத்தால் நம் உடலில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக சருமத்தில் இறந்த செல்களின் அளவு அதிகரித்து, முகப் பொலிவை இழப்பதனை தவிர்த்து கோடையில் சருமத்திற்கு தினமும் தவறாமல் பராமரிப்பு கொடுக்க வேண்டியது அவசியம். 

அப்படி கடும் வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க வீட்டிலேயே தயாரிக்கும் பாட்டி வைத்திய முறைகள் :

1. வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ ஆகிய மூன்றையும் அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால்  உடல் சிவப்பாக மாறும். 

2. பப்பாளியை அரைத்து, அத்துடன் சிறிது சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை என இருவேளையும்  செய்து வந்தால், முகம் பிரகாசமாக இருக்கும்.

3. திராட்சை பழத்தை பிழிந்து எடுத்து அதன் தோலை முகத்தில் மாஸ்க் போல பூசிக்கொண்டு பின்னர் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாறும்.

4. அரிசி மாவை தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், இறந்த செல்கள் நீங்குவதோடு, முகப் பொலிவும் அதிகரிக்கும். 

5. ஆரஞ்சு தோலை பொடியாக்கி, அதனுடன் அதே அளவு முல்தானிமட்டி, சந்தனம் சேர்த்து தயிருடன் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவவும். வாரம் ஒரு முறை இப்படி செய்துந்தால் முகம் பேசியல் செய்தது போல் மாறும். தயிருக்கு பதில் ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம். 

6. தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

7. இரண்டு ஸ்பூன் கடலை மாவு, 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாக காணப்படும். 

8. வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி ஆகிய இலைகளை காயவைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பொடியை பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால் முகம் கருப்பாகாது, மேலும் வியர்குருவும் வராது.