Type Here to Get Search Results !

I Life - Translate

Medicinal Properties of Honey (Herbs and Their Medicinal Properties)

This Page is About Medicinal Properties of Honey (தேனின் மருத்துவ குணங்கள்) & Herbs and Their Medicinal Properties


1. பலவகை மலர்களிலிருந்தும் தேனீக்களால் சேகரிக்கப்படும் தேன் ஈரச்சத்து மிகக் கொண்டது. 

2. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட சஞ்சீவினியாக மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சருமத்திற்கு மிருதுத்தன்மை, ஈரப்பதம் கொடுக்கிறது. 

3. உலர்ந்த சருமத்தினருக்கு தேன் ஒரு வரப்பிரசாதம். தேன் உள் மருந்தாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுகிறது. தீப்புண்களையும் ஆற்றும் குணம் கொண்டது. சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கக்கூடிய மாய்ஸரைசர்கள் கலந்து சோப் மற்றும் கிரீம்களில் தேன் உபயோகப்படுத்தப் படுகின்றது.

4. இயற்கையாக உருவான தேனை பன்னெடுங்காலமாக சித்த வைத்தியம் பயன்படுத்தி வருகிறது. தேன் தேனீக்களின் பிரிவுக்கு ஏற்பவும், அது எடுக்கப்படும் மலர் மற்றும் அது வளரும் இடத்திற்கு ஏற்பவும் குணத்தில் வித்தியாசப்படும். பல தேன் கடுமையான நோய்களுக்கு மருந்தாகவும் திகழ்கிறது. சிறிது தேன் கலந்த நீரில் குளித்தால்  மன உளைச்சல் நீங்கி நல்ல உறக்கம் வரும்.

5. முகத்தைக் கழுவி ஈரமில்லாமல் துடைத்துவிட்டு தேனுடன் சிறிது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக முகத்தில் பூசி ஊறவைத்து அரைமணிக்குப்பின் அழுத்தித் துடைக்கவும். வாரத்தில் இரண்டு இவ்வாறு முறை செய்துவந்தால் முகத்தில் நல்ல மெருகு ஏற்படும். 

6. தேன் காற்றிலுள்ள ஈரத்தை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது. அதனால் தேனை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காது காற்று படாது வறண்ட இடத்தில் வைத்து பாதுகாத்தல் நலம். தேன் கெட்டாலும் குணம் கெடுவதில்லை. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு தேனை உபயோகிக்கலாம். அசல் தேனின் சுவையே அலாதியானது. தேனில் உள்ள குளுகோஸ், பற்களுக்கு எந்தவிதத் தீங்கும் விளைவிப்பதில்லை. 

7. மலர்களிலிருந்து எடுக்கப்படும் தேனில் சுவையும், மணமும் அதிகம் எனினும் தென்னம் பாளையிலிருந்து எடுக்கப்படும் தேனில் சுவை மிக அதிகம். உணவுக்கு முன் தேன் 15 மில்லி அளவை 60 மில்லி காய்ச்சி ஆறிய நீரில் கலந்து அத்துடன் பாதி  எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து இரண்டு முதல் மூன்று வேளை உணவின் முன் உட்கொண்டால் உடலுக்கு ஆயாசமின்றி உடல் எடை குறையும்.

8. ஒரு கப் இளம் சூடான நீரில் இரண்டு கரண்டி தேன் கலந்து, தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அருந்தினால் நல்ல தூக்கம் வரும். 

9. இரைப்பைக்கு தேன் சிறந்த நண்பன். ஒரு கப் இளஞ்சூடான பாலில் 4 கரண்டி தேன் கலந்து அருந்தினால் ஜலதோஷம் கட்டுப்படும். உணவிற்கு சற்றுமுன் அருந்தினால் ஜீரணசக்தி பெருகும். தேனில் அடங்கியுள்ள மாவுச்சத்து இரத்தக் குழல்களை விரிவாக்கி, இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தும். மேலும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும் பெருக்கும். 

10. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தேன் தரும். அத்துடன் உடலுக்கு ஊறுதரும் நோய்க்கிருமிகளையும் கொல்லும். பழங்கள், உணவுவகை, பலகாரங்கள் எதனுடனும் தேன் பொருந்தி, தின்றாலும் நன்மை புரியும். தேன் முதியோருக்கு இளமை நீடிக்கச் செய்து வலிமையுடனும் இருக்க துணைபுரியும். தேன் அபூர்வமாக சிலருக்கு ஒவ்வாமல் போவதுண்டு. புதிதாக துவங்குபவர் ஆறுமாத தேனாகப் பார்த்து உட்கொள்ளுதல் நல்லது. ஒரு நாளைக்கு 200 கிராமுக்கு மேல் தொடர்ந்து அருந்துவது நல்லது அல்ல.