This Page is About Medicinal Properties of Green Chili (பச்சை மிளகாயின் மருத்துவ குணங்கள்) & Herbs and Their Medicinal Properties.
- பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
- இந்த பச்சை மிளகாய்யில் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
- பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
- பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
- இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள், பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
- பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது.
- பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.
- பச்சை மிளகாயில் ஆன்டிபாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.
- பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளது.
- உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
- மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும், இது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.
- பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.
- மிளகாய் வற்றல், 200 கிராம், மிளகு, 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அத்துடன் பால் அரை லிட்டர், நல்லெண்ணெய் அரை லிட்டர் சேர்த்து, சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி, வாரம் ஒரு முறை, தலைமுழுகி வந்தால், எந்த வகையான தலைவலியும் குணமாகும்.
- பச்சை மிளகாயில் ஆன்டிபாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி புரிகிறது.
- பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
Social Plugin