Type Here to Get Search Results !

I Life - Translate

Medicinal Properties of Ginger (Herbs and Their Medicinal Properties)



This Page is About Medicinal Properties of Ginger (இஞ்சியின் மருத்துவ குணங்கள்) & Herbs and Their Medicinal Properties. 

01. தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

02. இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

03. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. 

04. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. பொதுவாக அசைவ உணவு சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.

05. இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். 

06.  இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட்டால் வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுடவேணும் அதை நசுக்கி உடம்பில் தேய்த்தால் பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட்டால் வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக முன்று நோய்களையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. 

07.  காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும் மற்றும் உடம்பு இளமை பெறும்.

08. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும். 

09. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். 

10. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவந்தால் நீரிழிவு குறையும்.

11. உணவாக ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும். 

12. பொதுவாக நாம் அரிசியையே பிரதான தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற் பாடுகுன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது. 

13. இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

14. இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தம் செய்தல் மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும். இஞ்சியை சுத்தி செய்ய அதன் மேற்தோலை நன்றாக நீக்க வேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும்.  அதே போல் சுக்கை சுத்தம் செய்த பின் அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து, பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது சுத்தம் செய்யாமல் உபயோகிக்கவேண்டாம்.

15. இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

16. "அது என்ன இஞ்சி இடுப்பழகி" என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு குவளை மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம். 

17. எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம். மாரடைப்பை தடுக்கும் வலிமை இஞ்சிக்கு உள்ளது, கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது .

18. இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்பு உணவு சாப்பிடும் போது 5 கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவை கொழுப்பு சத்து மிக்க, அரிசி உணவை அடிக்கடி உண்பது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்க செய்துவிடும். ரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதைச் சரிசெய்வது அவ்வளவு எளிதல்ல. இதற்க்கு கைகண்ட மருந்தாகை இஞ்சி விளங்குகிறது. இரத்த நாளங்களின் செயள்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை இஞ்சியும், பூண்டும் விரைவாகக் குறைக்கும்.

19. சளிப்பிடித்தல், ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது, தலைவலியைப் போக்குகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது, கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது, நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மைய மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் மாதவிலக்கு அடிவயிற்றின் வலிகளுக்கும், கருப்பைவலிக்கும்  நன்மருந்தாக இஞ்சி உள்ளது.

20. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயிற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.